அழகை பறிகொடுத்த ஆர்த்தி.! அவசரப்பட்டுடீங்களே.. அட்வைஸ் செய்யும் ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


நடிகை கோவை சரளாவிற்கு பிறகு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகை இல்லை என்ற குறையை போக்கியவர் ஆர்த்தி. இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார். 

அதன் பின்னர், வெள்ளித்திரையில் விவேக், வடிவேலு போன்ற முன்னணி காமெடி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர். ஆர்த்தி தன்னுடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இணைந்து காமெடி செய்து வந்த கணேஷை திருமணம் செய்து கொண்டார். கடந்த 2017ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக மீண்டும் ஆர்த்தி ரி என்ட்ரி கொடுத்தார். 

அந்த நிகழ்ச்சியின் மூலம் இன்னமும் பிரபலமானவர் ஆர்த்தி. தற்போது ஊரடங்கு காரணமாக அனைவருமே வீட்டில் இருந்து வருகின்றனர். அனைவரும் சாப்பிடுவது, தூங்குவது சமூக வலைதளங்களில் உலா போவது என்று நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஆர்த்தி சமூக வலைத்தளங்களில் தன்னைத்தானே கலாய்த்துக் கொண்டு, எதையாவது பதிவிட்டு வருவது வழக்கம். இந்நிலையில், தற்போது தவறுதலாக தனது புருவத்தை ட்ரிம் செய்து கொண்டதாக கூறி போட்டோவை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் புருவத்தை எடிட்டிங் மூலம் அவ்வாறு செய்திருக்கிறீர்கள் என்று கண்டுபிடித்து கூறிவிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Arthi removed eye brow


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->