தர்மபிரபு படக்குழு முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகரியுடன், நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் யோகி பாபு. வெறும் நகைச்சுவை கதாபாத்திரமாக மட்டும் இல்லாமல், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். 

நகைச்சுவை நடிகர்கள் தற்போது கதாநாயகனும் நடிக்கின்றனர். இந்த வரிசையில் யோகிபாபுவும் இணைந்துள்ளார். 'தர்மபிரபு’ என்ற படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் யோகிபாபு எமன் வேடத்தில் நடிக்கிறார். எமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில் புதிய எமனை தேர்வு செய்ய தேர்தல் நடக்கிறது. 

அந்த பதவிக்கு வாரிசு அடிப்படையில் யோகி பாபுவும் சித்ரகுப்தனாக நடிக்கும் கருணாகரனும் போட்டியிடுகிறார்கள். இதில் யார் எமன் பதவியை பெறுவார்கள் என்பது தான் கதை. இந்த படத்தை முத்துகுமரன் இயக்குகிறார். ஸ்ரீவாரி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கிறார்.

இப்படத்தில் வத்திக்குச்சி திலீபன், ரமேஷ் திலக் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ஜனனி ஐயர், சாம், மேக்னா நாயுடு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.

முழு நீள நகைச்சுவை படமாக உருவாகும் இதில், யோகிபாபு எமனாகவும், ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். 2 கோடி ரூபாய் செலவில் எமலோகத்திக்கு  அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடக்கிறது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். அங்கு இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

English Summary

actor yogi babu movie in dharmaprabhu


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal