வீதியில் இறங்கி கிருமிநாசினி தெளிக்கும் பிரபல தமிழ் நடிகர்.! தல, தளபதி எல்லாம் கூப்புல உக்காருங்க.!  - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், நடிகர் விமல் தன்னுடைய சொந்த ஊரில் தெருக்களில் இறங்கி கிருமிநாசினி அடித்து மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் இருக்கும் மணப்பாறை அருகே பன்னாங்கொம்பு என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் நடிகர் விமல் தன்னுடைய சொந்த கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தன்னுடைய நண்பர்கள் மற்றும் அந்த கிராம இளைஞர்களுடன் சேர்ந்து விமல் கிருமிநாசினி மருந்தை தெளித்து வருகின்றார்.

ஒரு நடிகர் என்ற அகந்தை சிறிதும் இல்லாமல் இப்படி தெருவில் இறங்கி மக்களுக்காக வேலை பார்ப்பது பொதுமக்களிடையே பாராட்டை பெற்று வருகின்றது. 

அவர் அவ்வப்போது தன்னுடைய பகுதியில் நடக்கும் பிரச்சினைகளுக்கும் தேவைகளுக்கும் மக்களுக்கு உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனைக்கண்ட சமூக ஆர்வலர்கள் பலரும் தலதளபதி எல்லாம் போய் கூப்புல உட்காருங்க என்று இணையத்தில் கிண்டல் செய்து வருகின்றனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor vimal about corona virus 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->