வெண்ணிலா கபடிக்குழு படத்தின் நடிகர் மறைவு.. உருக்கமாக இரங்கல் தெரிவித்த இயக்குனர் சுசீந்திரன்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் ஹரி வைரவன். அந்தப் படத்தில் சிறப்பாக நடித்து பிரபலமானது மூலம் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் மற்றும் வெண்ணிலா கபடி குழு 2 உள்ளிட்ட திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து ரசிகர்களிலேயே பிரபலமானார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்குகள் மதுரையில் நடைபெறும் என கூறப்படுகிறது. தற்போது அவரது மறைவுக்கு துணை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் இயக்குனர் சுசீந்திரன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் 'எங்களுடைய வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நடித்த வைரவன் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரை பிரிந்து வாழும் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor vairavan passed away director susindhiran condolences


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->