உயிருக்கு போராடும் நிலையில், பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


மலையாள திரைத்துறையில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை நடிகர் ஸ்ரீனிவாசன். இவர் தேசிய விருது, மாநில விருதுகள் என பல்வேறு விருதுகளைப் பெற்றவர். இவர் தமிழில் லேசா லேசா என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஸ்ரீனிவாசனுக்கு கடந்த ஜனவரி மாதமே மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளது. அதனை தொடர்ந்து அவருக்கு மூச்சுத்திணறல் சரியானதாக கூறப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஸ்ரீனிவாசன் சென்னைக்கு செல்ல கொச்சின் விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு ஆஸ்டெர் மெட்சிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது அங்கு ஸ்ரீனிவாசனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sreenivasan admitted to hospital


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->