விஜய் பட இயக்குனரை, பங்கம் செய்யும் சிவகார்த்திகேயன்.! ஏதோ உங்களால முடிஞ்சது.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில்அடித்தளத்திலிருந்து வேகமாக முன்னேறியவர் என்றால் அது நடிகர் சிவகார்த்திகேயன் தான் தற்போது சிவகார்த்திகேயன் அயலான், டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். 

அறிமுக இயக்குனராக இருக்கும் சிபி.சக்கரவர்த்தியின் இயக்கத்தில்தான் திரைப் படத்தில் அவர் நடிக்கிறார். இந்த படத்தை லைகா புரொடக்ஷன் தயாரிக்கின்றது. சில தினங்களுக்கு முன்பு இதுகுறித்த அறிவிப்பு வெளியாகியது. 

இதுகுறித்து தளபதி 65 இயக்குனரான நெல்சன் ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார். இதை கண்ட விஜய் ரசிகர்கள் பலரும் தளபதி 65 படத்தின் அப்டேட் என்னாச்சு என்று அவரை கேள்வி கேட்க துவங்கினர். இதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் உங்களுடைய டாக்டர் மற்றும் விஜய் படம் குறித்த அப்டேட் எதுவும் இல்லையா என்று கேள்விகேட்டு எப்படி கோர்த்து விட்டேன் பார்த்தீர்களா என்று கிண்டல் செய்துள்ளார். 

அதற்கு நெல்சன் ஒரு வாழ்த்து சொன்னது குத்தமா என்னை இப்படி கோத்து விட்டுட்டியே என்று பதில் கமெண்ட் போட்டுள்ளார். ஒற்றை கமெண்ட்டில் விஜய் ரசிகர்களை தூண்டி விட்ட சிவகார்த்திகேயனை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sivakrthikeyan asking thalapathy65 update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->