சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பை வெளியிட்ட படக்குழு! வைரலாகும் Black Sheep வீடியோ!! - Seithipunal
Seithipunal


சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து, தற்போது சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகராக வளர்ந்து இருக்கிறார். சிவகார்த்திகேயன் இதுவரை 12 படங்களில் மட்டுமே நடித்துள்ளர். தமிழ் சினிமாவில் அதிக வசூல் புரியும் டாப் 5 முன்னணி நடிகர்களின் பட்டியலில் சிவகார்த்திகேயன் உள்ளார்.

படத்தில் நடிப்பதுடன், எஸ்.கே.புரொடக்‌‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி கனா என்ற படத்தை தயாரித்துள்ளார்.  இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

இதைத்தொடர்ந்து, எஸ்.கே.புரொடக்‌‌ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இந்தப் படத்தின் மூலம் தொலைக்காட்சி புகழ் ரியோ கதாநாயனாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜோடியாக சிரின் கஞ்சவாலா நடிக்கிறார். 

இவர்களுடன் ராதா ரவி, விக்னேஷ்காந்த் உள்ளிட்டோரும் பலரும் நடிக்கின்றனர். யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்நிலையில், இந்த படத்தின் தலைப்பை வித்தியாசமாக வீடியோ மூலமாக வெளியிட்டுள்ளது Black Sheep குழு.விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் டிரைலர் போன்று சில வசனங்களை அமைத்து வீடியோவை உருவாக்கி படத்தின் டிரைலரை வெளியிட்டு உள்ளனர்.

இந்த படத்திற்கு எம்ஜிஆரின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என தலைப்பு வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor sivakarthikeyan new movie name release


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->