ட்விட்டரில் மாறி மாறி கலாய்த்து கொண்ட நடிகர்கள்.! கொண்டாட்டத்தில் ரசிகர்களும் சேர்ந்ததால்., குதூகலமான ட்விட்டர்.!!  - Seithipunal
Seithipunal


தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் மூலமாக தனது திறமைகளை வெளிப்படுத்தி., பின்னர் இயக்குனர் பாண்டியராஜனின் இயக்கத்தில் வெளியான "மெரினா" திரைப்படம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் நடிகர் சிவகார்த்திகேயன். 

இவரது திறமையால் பல திரைப்படங்களில் நடித்து வளம் வந்த இவரது தயாரிப்பிலும்., சிறப்பு தோற்றத்திலும் உருவாக்கப்பட்ட கனா திரைப்படம் பெரும் வெற்றிப்படம் ஆக வந்த நிலையில்., தற்போது இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர்.லோக்கல் திரைப்படத்தில் நடித்து., இந்த படம் வரும் கோடைகாலத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

அதே போன்று தனது நகைச்சுவை திறமையால் திரையுலகில் அறிமுகமாகி தற்போது காமெடி நாயகனாக வளம் வருபவர் நடிகர் சதிஷ். நடிகர் சிவகார்த்திகேயனுடன் இவர் சில படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக உள்ள நிலையில்., ட்விட்டரில் மாறி மாறி கலாய்த்த சம்பவங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.

அந்த வகையில்., இன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை பார்த்துக்கொண்டு இருந்த நடிகர் சதிஷ்., தனது ட்விட்டர் பக்கத்தில் அம்பையர் அது அவுட் கிடையாது என்று பதிவிட்டுள்ளார். 


இதனை கண்ட நடிகர் சிவகார்த்திகேயன்., இயக்குனர் மறுகாட்சி பதிவிற்கு முறையிடுகிறார்., அதனை முதலில் கவனிக்காமல் ட்விட்டரில் என்ன வேலை? என்று கூறியிருந்தார். 


இந்த ட்விட்டை கண்ட நடிகர் சதிஷ் அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட காட்சிகளை கவனித்து., தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு., அந்த கடைசி முக பாவனைக்கு காரணம் இப்போதுதான் தெரிகிறது என்று கூறியிருந்தார். 


இந்த மூன்று ட்விட்களையும் கண்ட ரசிகர்கள் கொண்டாட்டத்தில் தங்களின் பங்காக இவர்களின் குறும்புத்தனத்தை புகழ்ந்து கருத்துக்களை பதிவு செய்தனர். 

English Summary

actor sivakarthikeyan and sathish funny fight in twitter celebrate by her fans


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal