சிவகார்த்திகேயனின் படத்தில்., கதாநாயகியாக அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மகள்.!! படக்குழு வெளியிட்ட அறிவிப்பு.!!
actor sivakarthikeyan act next movie introduce new heroine
திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மிஸ்டர்.லோக்கல் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் ரவி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறார்.
இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாகஇயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில்., அரசியல் மற்றும் திரில்லர் கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சிவகார்த்திகேயனின் பதினைந்தாவது படமாக உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை தற்போது படக்குழு உறுதிப்படுத்தி., சிவகார்த்திகேயனின் ஜோடியாக இப்படத்தில் கல்யாணி தமிழில் அறிமுகமாக உள்ளார் என்று அறிவித்துள்ளது. ஹலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர்., தமிழில் இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் வெளியான "ரா" என்ற திரைப்படத்திலும் துல்கர் சல்மானின் "வான்" என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சிவகார்த்திகேயன் இந்த படத்தை 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது., இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் அர்ஜுன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க., ஒளிப்பதிவாளர் ஜார்ஜ்.சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படத்தொகுப்பு பணிகளை படத்தொகுப்பாளர் ரூபன் கவனித்து கொள்கிறார்.
English Summary
actor sivakarthikeyan act next movie introduce new heroine