சற்றுமுன்: நானா அப்படி சொன்னேன்.! இல்லையே?! அரசியல்வாதிகளை மிஞ்சி, அந்தர் பல்டி அடித்த நடிகர் சிம்பு.!! - Seithipunal
Seithipunal


நடிகர் சிம்பு சமீப காலமாக தான் சொல்ல நினைப்பதை காணொளி மூலமாக சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு காணொளியில், ''எனக்கு கட் அவுட் வேண்டாம், பால் அபிஷேகமும் வேண்டாம். உங்களை பெட்ரா தாய்க்கு ஒரு சேலை எடுத்து கொடுங்கள்'' என்று தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது. அவரின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பாக விமர்சனங்களும் வந்தது. 

இதில் எதிர்ப்பு கருத்துக்களை உள்வாங்கி கொண்ட நடிகர் சிம்பு, எனக்கு கட் அவுட் வையுங்கள், அண்டா அண்டாவாக பால் அபிஷேகம் செய்யுங்கள் என்று நடிகர் சிம்பு புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கினார். மேலும், '’நான் இதற்கு முன்பு கட் அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் என்றேன். அதற்கு சிலர் எனக்கு ரசிகர்களே கிடையாது என்றும் வெறும் 2,3 பேர் தான் இருப்பார்கள் என்றும் தெரிவித்து இருந்தனர். 

குறைந்த ரசிகர்கள் கொண்ட சிம்பு ஏன் இதெல்லாம் கூறுகிறார் என்று விமர்சித்து வருகின்றனர். எனவே, இதற்கு முன்பு பால் அபிஷேகம் குறித்து பேசியதை நான் திருத்திக் கொள்கிறேன். இனி எனக்கு பேனர், கட்அவட் எல்லாம் அதிக அளவில் வையுங்கள். பால் அபிஷேகம் செய்யுங்கள். பாக்கெட் பால் எல்லாம் வேண்டாம். அண்டா அண்டாவாக பாலை கொண்டு வந்து ஊத்துங்கள். இதுவே நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன். எனக்கு இருக்கும் 2 ரசிகர்கள் அப்படி செய்வதால் ஒன்றும் பெரிதாக எந்த பாதிப்பும் வரப்போவதில்லை'' என்றும் தெரிவித்திருந்தார். 


இந்நிலையில், சற்றுமுன் (இன்று 28.1.2019) அண்டாவில் பால் காய்ச்சி மக்களுக்கு கொடுக்க சொன்னேன், கட் அவுட்டுக்கு ஊற்ற சொல்லவில்லை என்று நடிகர் சிம்பு பேட்டி பேட்டியளித்துள்ளார். மேலும், தான் பால் அபிஷேகம் பற்றி நான் கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் நடிகர் சிம்பு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் தான் தங்களின் கருத்துக்களை கூறிவிட்டு பின், நான் அப்படி கூறவில்லை என்று கூறுவார்கள் என்று பார்த்தால் நடிகர் சிம்பு அவர்களையும் மிஞ்சி ஒரு படி மேலே சென்றுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor simbu press meet about cut out issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->