18 ஆண்டுகால வரலாற்றை மாற்றி எழுதப்போகும் சிம்பு-தனுஷ்.! ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! - Seithipunal
Seithipunal


கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது.

வெந்து தணிந்தது காடு படத்தின் முழு கதையும் ஒன் லைன் ஸ்டோரியாக சமீபத்தில் லீக்கானது. நடிகர் சிம்பு கிராமத்தில் கூலி வேலை செய்யும் இளைஞராக இதில் நடிக்கிறார் என்றும் தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற அவருக்கு இந்த பணம் போதவில்லை எனும்போது மும்பைக்கு சென்று பிரச்சினைகளை எதிர்கொண்டு மீண்டுவருவது தான் என்று கூறப்படுகிறது. 

 
ஏ.ஆர்.ரகுமான் கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை கொண்டிருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தனுஷின் திருச்சிற்றம்பலம் படமும் இதே தேதியில் வெளியாகவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

ஒருவேளை இரண்டு படங்களும் மோதினால் 18 ஆண்டுகளுக்கு பின் தனுஷ் மற்றும் சிம்பு இருவரது படமும் ஒரே நாளில் வெளியாகிறது என்ற பெருமையை பெறும். இதற்கு முன்பாக கடந்த 2004-ல் தனுஷின் ட்ரீம்ஸ் மற்றும் சிம்புவின் மன்மதன் உள்ளிட்ட படங்கள் ஒரே நாளில் தீபாவளிக்கு ரிலீசாகியது கவனிக்கத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor simbu dhanush Movie may release in same day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->