விக்ரம் பட குழுவினரை நேரில் சந்தித்த சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான்.. வைரலாகும் புகைப்படங்கள்.! - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்ற திரைப்படம் விக்ரம்.

தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் இணைந்து நடித்த விக்ரம் திரைப்படம், ஒட்டு மொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்ததால் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்றது.

தமிழகத்தில் மட்டும் தற்போது வரை இந்த படம் ரூபாய் 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

இந்த நிலையில், விக்ரம் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி, கமல்ஹாசனை தனது வீட்டிற்கு அழைத்து கெளரவப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து, சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது அன்பான பழைய நண்பரைக் கொண்டாடி கௌரவிக்கிறேன் விக்ரமின் அற்புதமான வெற்றிக்காக, என் அன்புக்குரிய சல்மான் கான் மற்றும் லோகேஷ் கனகராஜ் குழுவினருடன். தீவிரமான & த்ரில்லான படம் பாராட்டுக்கள் நண்பா" என தெரிவித்துள்ளார் .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Salman Khan and chiranjeevi wishes Vikram movie crew


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->