நடிகர் ராமராஜன் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதி! - Seithipunal
Seithipunal


நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை.

பொதுமக்கள் மட்டும் இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட முன்கள பணியாளர்களும் அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 ஊரடங்கு அமலில் உள்ளதால் படப்பிடிப்புக்கு செல்லாமல் திரைத்துறையினர் வீட்டிலேயே இருந்தாலும் அவர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. பாலிவுட்டில் நடிகர் அமிதாப்பச்சனின் மகன் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள் குணமடைந்தனர். 

அதேபோல் தமிழில் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிக்கப்பட்டு சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் நடிகரும், எம்.எல்.ஏ-வுமான கருணாஸூக்கு கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் அதிலிருந்து மீண்டார்.

இத்தகைய சுழலில் நடிகர் ராமராஜனுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து,  சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor ramarajan admitted in hospital for corona positive


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->