ஹிந்தி திரையுலகினருக்கு அடுத்த சோகம்... இரங்கல் தெரிவித்த ரஜினிகாந்த்.!! - Seithipunal
Seithipunal


பிரபல ஹிந்தி திரையுலக நடிகரான ரிஷி கபூர் இன்று உடல்நலக்குறைவால் இயற்கையை எய்தியுள்ளார். ஹிந்தி திரையுலகில் பிரபல நடிகராகவும், இந்திய திரையுலகில் மதிக்கத்தக்க நடிகராகவும் இருந்து வந்தவர் ரிஷி கபூர் (வயது 62). 

இவர் உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இந்த விஷயம் திரையுலகினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏற்கனவே இர்பான் கான் இறந்த துயரில் இருந்து மீள்வதற்குள், ரிஷி கபூரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ரிஷி கபூர் 4 செப்டம்பர் 1952 ஆம் வருடத்தில் பிறந்த நிலையில், 100 காதல் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதில் 36 திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகும். இவரின் மரணம் திரைஉலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor rajinikanth pray rishi kapoor after know death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->