பிரபல இயக்குனரும் நடிகருமான ராஜசேகர் திடீர் மரணம்..! - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குனரும் நடிகருமான ராஜசேகர் சென்னையில் இன்று மரணமடைந்தார். பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில் ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர் ராஜசேகர். மற்றும் இது ஒரு "பொன் மாலை பொழுது" என்ற பாடலில் தோன்றியிருக்கிறார்.

அதன்பிறகு தனது நண்பர் ராபர்ட் உடன் இணைந்து நிறைய படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக 'பாலைவன சோலை', 'சின்ன பூவே மெல்ல பேசு', 'பறவைகள் பலவிதம்' போன்ற படங்களை சேர்ந்து இயக்கினார்கள்.

அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய ராஜசேகர் தொடர்ந்து பல படங்களிலும் மற்றும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்துள்ளார். இவர் சின்னத்திரை சங்கங்களிலும் பொறுப்பு வகித்திருக்கிறார்.

இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்திருக்கிறார். அதனால் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.  இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor rajesekar dead


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->