வின்னர் பிரசாந்த்தை எதிர்பார்த்த ரசிகர்கள்... அல்டிமேட் புகைப்படம் வெளியாகி அதிர்ந்துபோன ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ஸ்ரீராம் ராகவனின் இயக்கத்தில், நடிகர் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் "அந்தாதூண்". இந்த திரைப்படம் கடந்த 2018 ஆம் வருடத்தின் போது வெளியானது. 

இப்படம் வெளியான நேரத்தில் நல்ல வசூலையும், மாபெரும் வரவேற்பையும் பெற்று இருந்தது. இதுமட்டுமல்லாது சிறந்த இந்தி திரைப்படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைக்கதை என தேசிய விருதுகளையும் தட்டி சென்றது. 

இப்படம் வெளியான பின்னர் கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து, இதனை ரீமேக் செய்து வெளியிட பலரால் முடிவு செய்யப்பட்டு கடுமையான போட்டியும் உரிமையாளர்களுக்கு இடையே நடைபெற்று வந்தது. 

இதனையடுத்து, இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் தியாகராஜன் பெற்றதை அடுத்து, இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில், ஆயுஷ்மானின் கதாபாத்திரத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்கவுள்ளார். 

இந்த படத்தின் கதைக்களத்தின் படி நாயகன் பியானோ இசைக்கலைஞர் என்ற காரணத்தில், சும்மர் 6 மாதம் பியானோ பயிற்சி மேற்கொண்ட நடிகர் பிரசாந்த், தற்போது 22 கிலோ எடை குறைத்துள்ளார். இதுமட்டுமல்லாது மேலும் தனது எடையினை இந்த படத்துக்காக குறைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor prashanth latest image


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->