அதை எப்படி நிறுத்துவது?..! ஆலோசனை கேட்கும் பிரபாஸ்.. ரசிகர்கள் காட்டம்.!! - Seithipunal
Seithipunal


பாகுபலி திரைப்படத்தின் இரண்டு பாகத்திலும் அனுஷ்கா - பிரபாஸ் ஜோடியாக நடித்திருந்த நிலையில்., இவர்கள் இருவரையும் பற்றிய கிசுகிசுக்கள் தொடர்ந்து வெளியாகி வந்தது. மேலும்., இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து பேச்சுகளும் எழுந்து வந்தது. 

இந்த பிரச்சனையை கவனித்த இருவரும் மறுப்பு தெரிவித்த நிலையில்., அனுஷ்கா - பிரபாஸை காதலித்து வருவதாக தொடர்ந்து தீவிர தகவல்கள் பரவி வந்தது. இந்த தருணத்தில்., இது குறித்த தகவலுக்கு பிரபாஸ் தற்போது மனம் திறந்துள்ளார். 

இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது., நானும் - அனுஷ்காவும் குறைந்தளவு படங்களில் மட்டுமே சேர்த்து நடித்துள்ளோம். இதனால் எங்களுக்குள் நல்ல நட்பானது ஏற்பட்டது. 

கடந்த 11 வருடங்களாக இந்த நட்பு தற்போது வரை நல்ல நிலையில் நீடித்து வருகிறது. பிறர் நினைப்பதை போலவோ அல்லது கூறுவது போலவோ இது காதல் இல்லை...எங்களுக்குள் காதல் இருக்கும் பட்சத்தில் நாங்கள் வெளியே கூறவும் எங்களுக்கு பிரச்சனை இல்லை...

எங்கள் இருவரில் ஒருவருக்கு திருமணம் நடைபெறும் வரை இதனைப்போன்ற வதந்திகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கும் என்றும்., அனுஷ்கா அழகான மற்றும் சிறப்பாக நடிக்கும் நடிகை. நல்ல குணமுள்ளவர். எங்களை திரையில் ஜோடியாக பார்த்து., நிஜத்திலும் அவ்வாறே எதிர்பார்க்கின்றனர்.. எங்களை பற்றிய வந்ததியை எப்படி நிறுத்துவது என்று எங்களுக்கு தெரியவில்லை.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor prabhas speech about anushka friendship relationship


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->