நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் காணவில்லை! மனைவி பரபரப்பு புகார்! - Seithipunal
Seithipunal


நடிகரும், மருத்துவருமான பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா, கண்ணா லட்டு திங்க ஆசையா, ஐ,கோலி சோடா உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்தவர் . நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் மூலம் ரசிகர்கள் மத்தியில் பவர் ஸ்டார் மிகவும் பிரபலமானார்.

பவர் ஸ்டார் சீனிவாசன் சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பட வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி புதுவண்ணாரப்பேட்டை சேர்ந்த தயாநிதி என்வரிடம் மோசடியில் ஈடுபட்டதாக காவல் துரையின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென காணாமல் போய் விட்டாதாகவும், அவரை கண்டுபிடித்து தருமாறு அவரது மனைவி ஜூலி சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவரை சிலர் பணம் கேட்டு மிரட்டியதாகவும் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

இதனைதொடர்ந்து பவர் ஸ்டார் சீனிவாசன் மனைவி ஜூலி கொடுத்த புகார் அடிபடையில் அண்ணாநகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் சீனிவாசன் ஊட்டிக்கு சென்று விட்டதாகவும் குடும்பத்தில் சொத்து பிரச்சினை காரணமாக சென்று விட்டார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

English Summary

actor power star srinivasan missing


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal