நடிகர் விஷாலுக்கு எதிராக ராஜினாமாவா?! சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்த பிரபல நடிகர்!  - Seithipunal
Seithipunal


நடிகர் விஷால் நடிகர் சங்கத்திலும் தயாரிப்பாளர் சங்கத்திலும் பதவியேற்ற நாள் முதலே சர்ச்சைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் பஞ்சமே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் தற்போது லேட்டஸ்டாக இருப்பது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவாக தான் இருக்கும். 

பாராட்டு விழாவை நடத்திய தீருவேன் என்று ஒற்றைக்காலில் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று வந்த நிலையில் திடீர் திருப்பமாக தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் பதவியினை நடிகர் பார்த்திபன் ராஜினாமா செய்துள்ளார். 

பிப்ரவரி 2 மற்றும் 3ம் தேதிகளில் இந்த பாராட்டு விழா நடைபெறும் நிலையில் இன்று ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவதற்காக நான் ராஜினாமா செய்யவில்லை/ பாராட்டு விழா முடிந்த பிறகு நான் ராஜினாமா செய்து அதற்கான காரணத்தை தெரிவிப்பேன் என  நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor parthiban resigned his post in producer council


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->