பிரபல 26 வயது இளம் நடிகர் புற்றுநோயால் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்.!! - Seithipunal
Seithipunal


பாலிவுட் திரையுலகில் சல்மான்கான் மற்றும் அசின் நடித்த "ரெடி" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நபர் மோஹித் பஹெல். இதற்கு பின்னர் இவர் சோர் ஹே, காலி காலி, ஜப்பாரியா ஜோடி, ஊவா மற்றும் மிலன் காங்கிஸ் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 

தற்போது ராணி முகர்ஜி மற்றும் சேயீப் அலிகான் நடிப்பில் தயாராகிவரும் பாண்டீ அவுர் மற்றும் பப்ளி 2 ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்த ஜனவரி மாதம் துவங்கி நடைபெற்று வந்தது. 

இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மோஹித் பஹெல் கடந்த சில மதத்திற்கு முன்னதாக புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார். இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார். 

ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊரான உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருக்கும் மதுராவிற்கு சென்ற நிலையில், திடீரென பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவருக்கு 26 வயதே ஆகும் நிலையில், இவர் புற்றுநோயால் உயிரிழந்தது திரைஉலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Mohit Baghel passed away 26 age due to cancer diseases


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->