தனுஷுக்கு ஜோடியாக 3 ஹீரோயின்கள்.! ஓவர் குஷியில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் அனைவருக்கும் பிடித்த நாயகனாக உள்ள தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் 'D43' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தனுஷ், செல்வராகவன் இயக்கத்தில் 'நானே வருவேன்' படத்தில் நடிக்கவிருக்கிறார். 

மேலும், இவர் ஆயிரத்தில் ஒருவன் 2, ராட்சசன் பட இயக்குனருடன் ஒரு படம், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என ஏராளமான படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இதற்கு இடையே மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார்.

தனுஷ் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் தனுஷுக்கு ஜோடியாக  இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor dhanush acted new movies


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->