சத்தமே இல்லாமல் நடைபெற்ற பிரபல நகைச்சுவை நடிகரின் காதல் திருமணம்.. மணமகளை கண்டு அசந்து போன ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் நகைச்சுவை நடிகர் அஸ்வின் ராஜா. இவர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மொட்டை ராஜேந்திரன் மகனாக நடித்திருந்தார். 

அதைத்தொடர்ந்து கும்கி, தில்லு முல்லு உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். கும்கி படத்தில் தம்பி ராமையா உடன் இணைந்து நகைச்சுவையில் அசத்தியிருப்பார் அஸ்வின். இந்த படத்திற்கு பின்னர் பலரும் கும்கி அஸ்வின் என்று அழைத்து வந்தனர். 

இவர் சென்னை கேகே நகரை சேர்ந்த ராஜசேகரின் மகள் வித்தியாவை காதலித்து வந்தார். வித்தியா அமெரிக்காவில் எம்.எஸ் படித்து முடித்துவிட்டு இருவீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து நேற்று முன்தினம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

அவரது திருமணத்தில் நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தது இருபது பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor ashwin raja marriage photo


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->