பிக் பாஸ் போட்டியில் அஜித் படத்தின் கதாநாயகி!  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக் பாஸ் தொடரின் மூன்றாவது சீசன் ஆனது, இன்று தொடங்கியுள்ளது. இத்தனையும் வழக்கம் போலவே நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 

இந்த சீசனில் இடம்பெறப்போகும் 15 போட்டியாளர்கள் யார் யார் என்ற பல யூகங்கள் கணிப்புகளும் முன்கூட்டியே வந்த நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசன் ஒவ்வொரு போட்டியாளர்களாக அறிமுகப்படுத்தி வருகிறார். தற்போது வரை அவர் ஆறு போட்டியாளர்களை அறிமுகப்படுத்திய நிலையில், நடிகர் அஜித்குமார் நடித்து வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ள கதாநாயகி அபிராமி ஐயர் கலந்து கொண்டுள்ளார். 

நேர்கொண்ட பார்வை படமானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கபடும்  நிலையில் பிக்பாஸ் இல்லத்திற்கு வந்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது. ஏனெனில் 100 நாட்கள் அவர் அங்கே இருக்கும் பொழுது படம் வெளியாகும்போது, அவர் வெளியே இருக்கும் சூழல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

முதல் ஐந்து போட்டியாளர்களாக செய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு, இலங்கையை சார்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, நடிகை சாக்ஷி அகர்வால், நகைச்சுவை நடிகை மதுமிதா, சின்னத்திரை மற்றும் பெரிய நடிகர் கவின் ஆகியோர் களம் இறங்கியுள்ளார்கள் மீதமுள்ள போட்டியாளர்களை கமல் அறிமுகம் செய்து வருகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

abhirami iyyar in biggboss season 3


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->