திருமணத்திற்கு பிறகு சாயீஷா நடிப்பாரா? திருமண வரவேற்பில் ஆர்யா அளித்த பதில்! ஷாக் ஆன ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நாயகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. இதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்த இவருக்கென பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. 

அவர் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது அப்படத்தின் நாயகி சாயிஷாவுடன் காதல் ஏற்பட்டதாகவும் அவர்கள் வரும் மார்ச் மாதம் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியானது.அதனை தொடர்ந்து ஆர்யா வரும் மார்ச் மாதம் 9 மற்றும் 10 ந் தேதி  சாயீஷாவை  திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி, ஹைதராபாத்தில் ஆர்யா-சாயீஷாவின் சங்கீத் நிகழ்ச்சி மார்ச் 9  கோலாகலமாக நடைபெற்றது. மேலும் திருமணம் மார்ச் 10 ம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது.அதனை தொடர்ந்து ஆர்யா-சாயிஷாவின் திருமண வரவேற்பு சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. 

ஆர்யாவிடம் சாயிஷாவை திருமணம் செய்து கொண்டது பற்றி கேட்ட போது அவர் கூறியதாவது:-

சாயிஷாவை மனைவியாக பெற்றதில் எனக்கு மிக மகிழ்ச்சி. கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது இருவருக்கும் இடையே சின்ன ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் காப்பான் படத்தில் மீண்டும் நடிக்க தொடங்கியபோது எங்களுக்குள் இருந்த நட்பை பார்த்து, இருவரது பெற்றோரும் திருமண ஏற்பாடுகள் செய்தார்கள்.

என் பெற்றோர் ரொம்ப நாட்களாக என்னை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்தி வந்தனர். அவர்களது ஆசையை நிறைவேற்றி அவர்களுக்கு பிடித்த பெண்ணையே திருமணம் செய்துள்ளது மகிழ்ச்சி.திருமணத்துக்கு பின்னர் நடிப்பது குறித்து சாயிஷாவின் முடிவுக்கே விடுகிறேன். அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டேன் என அவர் கூறியுள்ளார்.

English Summary

aarya talk about marry sayeesha


கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?கருத்துக் கணிப்பு

மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியானது?
Seithipunal