பிரபல நடிகரிடம் கைவரிசை காட்டிய ஆன்லைன் நிறுவனம்.! ஆர்டர் செய்த அலைபேசிக்கு., வந்தது என்னவென்று தெரியுமா?.!! - Seithipunal
Seithipunal


 

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான பாய்ஸ் திரைப்படம் மூலம் அறிமுகமாகியவர் நடிகர் நகுல். இந்த திரைப்படத்திற்கு பின்னர் "காதலில் விழுந்தேன்" திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். 

இதற்கு அடுத்தபடியாக மாசிலாமணி., கந்தக்கோட்டை., நான் ராஜாவாக போகிறேன் மற்றும் வல்லினம் போன்ற திரைப்படங்களில் நடித்தார். மேலும் பிரபல நடிகை தேவயானியின் சகோதரர் ஆவார். 

இவரது மனைவிக்கு திருமண நாள் பரிசாக விலையுயர்ந்த ஐபோன் வழங்க முடிவெடுத்து., இணையத்தின் மூலம் ரூ.1.25 இலட்சம் வழங்கி ஐபோனை ஆர்டர் செய்துள்ளார். மறுநாள் காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஐபோன் வந்ததாக கூறி பார்சலை வழங்கிவிட்டு சென்றுள்ளனர். 

பார்சல் வந்ததை அறிந்த நகுல் பார்சலை பிரித்து சோதனை செய்த போது., அந்த பார்சலில் போன் ஏதும் இல்லாததால் மனஉளைச்சலுக்கு உள்ளான நிலையில்., சம்பவம் குறித்து அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை முதலில் மறுத்த நிறுவனம் பின்னர் ஏதேதோ கூறி சமாளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A ONLINE MARKETING COMPANY CHEAT ACTOR NAGUL.


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->