அவர்கள் எல்லாம், அந்த விஷயத்தில் மிருகங்கள்…! பிரபல நடிகையின் பகிங்கர பேட்டி….! - Seithipunal
Seithipunal


 

தமிழில் சமீபத்தில்  “யுனிவர்சிட்டி” என்ற படத்தில் இடம் பெறும் பாடல் காட்சியில் ஆடி உள்ளார், நடிகை ஷெர்லின் சோப்ரா.

இவர், தமிழ் மட்டுமல்லாது, இந்தி, தெலுங்கு, ஆங்கில படங்களில்  நடித்திருக்கிறார். மாடலாக, நிர்வாணமாகவும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். காமசூத்ரா படத்திலும் இவர் நடித்துள்ளார். அவ்வப்போது, புதிய ஆல்பங்களை வெளியிடுவதும் உண்டு.

அதே போல், சமீபத்தில் ஒரு வீடியோ பாடலை வெளியிட்டார்.

அப்போது அவர் பாலிவுட் சினிமாக்காரர்களைப் பற்றி, பகிங்கரக் குற்றச்சாட்டுகளுடன் பேட்டி அளித்தார்.

சினிமா உலகில், முக்கியமாக பாலிவுட்டில், பாலியல் மிருகங்கள் ஏராளமாக உள்ளனர். அவர்கள், சினிமா வாய்ப்பு தேடி வரும் பெண்களிடம், இரவு டின்னருக்கு வருகிறாயா? வேலை விஷயமாக உன்னிடம் பேச வேண்டும், என்று அழைப்பார்கள்.

அதன் அர்த்தம் உண்மையில் வேறு. அவ்வாறு அழைத்த நபருடன், அந்தப் பெண், அவருடன் இரவில் டின்னரை முடித்து விட்டு, அவருடன் இரவில்  படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இப்படி புதிதாக நடிக்க வரும் பெண்களை, பாலியல் ரீதியாக, மிருகங்கள் போல் நடந்து கொள்கின்றனர், பாலிவுட்டைச் சேர்ந்தவர்கள்.

நான் நடிக்க வந்த புதிதில், என்னிடமும், இப்படி அழைத்தார்கள். அதன் அர்த்தம் அப்போது எனக்குப் புரியவில்லை. இப்போது, டின்னர் என்ற வார்த்தை கூட என் காதில் விழுந்தால், எனக்கு அலர்ஜியாக இருக்கிறது. அந்த வார்த்தையை என் வாழ்நாளில் நான் கேட்க விரும்பவில்லை.

அந்த மாதிரியான அழைப்புகளை ஏற்றுக் கொள்ள மாட்டேன், என்று கூறி உள்ளார்.

அவரது பேட்டி, பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English Summary

a familiar actress statement


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal