மூட்டை முடுச்சு கட்ட தயாரான வோடோஃபோன்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!! - Seithipunal
Seithipunal


வோடோஃபோன் தொலைத்தொடர்பு நிறுவனம், இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. வோடபோன் நிறுவனம் இந்தியாவில் தனித்து இயங்கிய நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, ஐடியா நிறுவனத்துடன் இணைந்து வோடோஃபோன்-ஐடியா என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கி வருகிறது. 

நடப்பு நிதியாண்டின், முதல் இரண்டு காலாண்டுகளாக, தலா 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை வோடபோன் நிறுவனம் சந்தித்துள்ளார். மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொலைத்தொடர்பு கட்டணத்தில் 28 ஆயிரத்து 306 கோடி ரூபாயை நிலுவையாக வோடபோன் நிறுவனம் வைத்திருக்கிறது. 

ஜியோ வருகையால், நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நெருக்கடியால் வோடோஃபோன் நிறுவனத்தின் நஷ்டம், தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், வோடோஃபோன் நிறுவனம், தனது இந்திய சேவையை நிறுத்திக்கொண்டு, நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என தொலைத்தொடர்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய சூழலில் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. தொடர்ந்து தொழில் செய்வதற்கான சாத்தியம் இல்லாமல் போனால், வோடோஃபோன் தன்னுடைய இந்திய செயல்பாடுகளை நிறுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vodafone loss in india


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->