காலி பால் பாக்கெட்களுக்கு காசு!! - Seithipunal
Seithipunal


கடந்த ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் மறுசுழற்சி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக பால் பாக்கெட்டுகள் மட்டும் பயன்பாட்டில் இருந்து வந்தது.

தமிழக அரசால் நிர்வகிக்கப்படும் ஆவின் நிறுவனத்தின் பால் பாக்கெட்டுகள் மறுசுழற்சிக்கு உகந்தவை என்பதால் அதை திருப்பித் தரும் வாடிக்கையாளர்களுக்கு பத்து பைசா கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் வாடிக்கையாளர்கள் என ஒவ்வொருவரும் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குறிப்பிட்ட ஆவின் பால் நிலையங்களில் காலி ஆவின் காலில் பால் பாக்கெட்டுகளை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், ஆவின் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடம் முறையாக சென்று சேரவில்லை என காங்கிரஸ் கட்சி பிரமுகர் அமெரிக்கை நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, அரசு மற்றும் தனியார் நடத்தப்படும் கடைகளில் சென்று நான் நேரில் விசாரணை விசாரித்தபோது மறுசுழற்சி பற்றியே மக்களுக்கு தெரியவில்லை என்றும் இதுவரை பெசன்ட் நகர் ஆவின் பாலகத்தில் 3 மறுசுழற்சி மட்டுமே இதுவரை நடந்துள்ளதாக தெரிவித்தார். நான் 210 காலி பக்கெட் பால் பாக்கெட்டுகளை கொடுத்து 21 ரூபாய் பெற்றுள்ளேன் எனஅந்த பதிவிட்டுள்ளார்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

used milk packet for money


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->