உலகளவில் நிலைகுலைந்த கச்சா எண்ணெய்... இந்தியாவில் ஒத்தக்காலில் நிற்கும் பெட்ரோல், டீசல் விலை..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலையில்லாமல் உயர்வையும், குறைவையும் சந்தித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். மேலும், விலை உயரும் போது ரூபாய் கணக்கிலும், குறையும் போது பைசா கணக்கிலும் குறைந்து வருகிறது.

கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் பெட்ரோல் டீசலின் விலையை மேலும் அதிகரித்தது. இந்த நிலையில், உலகை ஆட்டி வைத்தவரும் கரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக அணைத்து நாடுகளும் பொருளாதார ரீதியிலான பிரச்சனையை சந்திக்க உள்ளது. 

உலகளவில் கச்சா எண்ணெய்யின் விலையானது கடுமையான அளவு வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெட்ரோல் டீசல் விலையானது தொடர்ந்து அதிகமாகவே இருக்கிறது.

இந்த நிலையில், பெட்ரோல் டீசல் விலை எந்த மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ. 72.28-க்கும், டீசல் ரூ. 65.71-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது வாகன ஓட்டிகளிடையே மட்டுமல்லாது, வாகனம் இல்லாத நபர்களையும் பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today petrol diesel price chennai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->