பால், தயிர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது, எவ்வளவு தெரியுமா?  - Seithipunal
Seithipunal


தனியார் பால் மற்றும் தயிர் பாக்கெட்டின் விலை உயர்வு இன்று அமலுக்கு வந்தது. கொள்முதல் விலை உயர்வால் பால் விற்பனை விலையை உயர்த்தவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக தனியார் பால் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்தநிலையில், ஆரோக்கியா, ஹெரிடேஜ், டோட்லா  உங்கிட்ட நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும்,  அர்ஜூனா நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் உயர்த்தப்படுவதாக மொத்த விற்பனையாளர்களுக்கு பால் நிறுவனங்கள் அண்மையில் சுற்றறிக்கை அனுப்பின.

இதைப்போன்று தயிர் விலையும் லிட்டர் 58 ரூபாயிலிருந்து 62 ரூபாயாக உயர்த்தப்படுவதாக பால் நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சமன்படுத்தப்பட்ட பால் லிட்டர் 48 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும்,  நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் 52 ரூபாயிலிருந்து 56 ரூபாயாகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் 60 ரூபாயிலிருந்து 62 ரூபாயாகவும் விலை உயர்ந்தது. இந்த விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today onwards private company milk price hike


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->