நூல் பிடித்து குறைந்த தங்கம் விலை.. கவலையில் இல்லத்தரசிகள்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. தற்போது ஆபரண தங்கத்தின் விலை 36 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை உயர தொடங்கியுள்ளது. 

கடந்த மாதத்தில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 34 ஆயிரத்தைத் தாண்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலை ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் மீண்டும் 36 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது.. 

இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.136 குறைந்துள்ளது. இதனால் நேற்றைய விலையில் இருந்து ரூ.136 குறைந்து, ரூ.35,928 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.17 குறைந்து ரூ.4491 ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி ஒரு கிராம் ரூ.50.15 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் வெள்ளியானது ரூ.501.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.50,150 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold price reduce rs 17 per gram


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->