இரு நாட்களாக குறைந்த டீசல் விலை..மாற்றம் காணாத பெட்ரோல்.! இன்றைய விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் மாதம் முதலாக, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

நேற்று பெட்ரோல், லிட்டர் 84.21 ரூபாய், டீசல் லிட்டர் 76.99 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று டீசல் லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து, 76.85 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் விலையில் மாற்றம் இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today diesel price decrease but petrol price not changed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->