ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்கியது.! இதனை ஆயிரம் கோடியா? மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


70 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டு உள்ளது என்று மத்திய அரசு அறிவித்து இருந்த நிலையில், ஏர் இந்தியாவை, டாடா சன்ஸ் நிறுவனம் வாங்கி விட்டதாக மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த வராமே ஏர் இந்தியா நிறுவனத்தை, டாடா குழுமம் வாங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இருப்பினும் பென்சன் பொறுப்பு, ரியல் எஸ்டேட் சொத்துக்கள், கடன் உள்ளிட்டவை குறித்து இருதரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்துவந்தது.

இந்த நிலையில், இறுதிக் கட்ட பேச்சுகள் இருதரப்புக்கும் இடையே நடந்தது. எவ்வளவு தொகைக்கு ஏலம் எடுக்க இருக்கிறது என்பது குறித்த தகவலை டாடா நிறுவனம் அரசுக்கு சமர்ப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, கடிந்த வாரம் ஏர் இந்தியாவை டாடா நிறுவனம் வாங்கியதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து இருந்தது. 

இந்நிலையில், டாடா குழுமத்துக்கு ஏர் இந்தியா நிறுவனம் 18 ஆயிரம் கோடிக்கு விற்கப்பட்டதாக மத்திய அரசு சற்று முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

62 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா நிறுவனம் மீண்டும் டாட்டா நிறுவனத்துடன் இணைந்து உள்ளது.  இதனை மத்திய அமைச்சர்கள் குழு இன்று உறுதி செய்ததாக மத்திய அரசு செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TATA take over air india now


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->