தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்வதற்கு காரணம் இது தானம்!!  - Seithipunal
Seithipunal


உலக அளவில் இன்று தங்கத்துக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் தங்கத்தின் விலையும் கடுமையான ஏற்றத்தை கண்டு வருகிறது. தங்கத்தை வாங்குவதில் பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளும் அதீத ஆர்வம் காட்டி வருகின்றன. ஏனென்றால் ஒரு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை தங்கம் தான் நிர்மாணிக்கிறது.

இந்தியாவில் ரிசர்வ் வங்கி உள்ள தங்கத்தின் இருப்புக்கு ஏற்பவே தான் எல்லா நாடுகளும் பணத்தை புழக்கத்தில் விடுகின்றன. இதனால் தங்கத்தை இருப்பு வைத்துக்கொள்வதில் உலக நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. உலக அளவில் தங்கத்தை தற்போது அதிக அளவில் இருப்பு வைத்துள்ள நாடு அமெரிக்கா ஆகும். 

அதிக தங்கத்தை தன் வசம் வைத்து இருக்கும் நாடுகளின் உத்தேச மதிப்பு பட்டியலை சமீபத்தில் உலக தங்க கவுன்சில் வெளியிட்டது, அந்த வகையில், அமெரிக்கா 8133.5 டன் தங்க இருப்பை தன் வசம் வைத்துள்ளது. இதற்கு அடுத்து இரண்டாவதாக ஜெர்மனி தான் அதிக அளவு தங்கத்தை தன் வசம் வைத்துள்ளது. ஜெர்மனி நாட்டின் தங்க இருப்பு 3367.8 டன்.

மேலும், இத்தாலி 2451.8 டன், பிரான்ஸ் 2436.1 டன், ரஷியா 2207 டன், சீனா 1926.5 டன், சுவிட்சர்லாந்து 1040 டன், ஜப்பான் 765.2 டன், இந்தியா 618.2 டன், நெதர்லாந்து 612.5 டன் தங்கம் இருப்பு வைத்துள்ளது. தங்கம் இருப்பு பட்டியலில்இதற்கு முன்பு 10-வது இடத்தில் இருந்த  இந்தியா. தற்போது 9-வது இடத்துக்கு முன்னேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் மட்டுமின்றி பல்வேறு உலகநாடுகளிடேயே தங்கத்தை வாங்குவதில் ஏற்படும் போட்டியால் தான் தொடர்ந்து தங்கத்தில் விலை ஏற்றம் கண்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

resons for gold price increase


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->