வங்கியில் கடன் வாங்க இது சரியான நேரமா.?! வட்டி விவரம் பற்றி தெரிஞ்சிக்கோங்க..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்வை ஆய்வறிக்கை கூட்டம் வழக்கமாக 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய கடன் தொகைக்கான வட்டி விகிதம் மாற்றங்கள் செய்வது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசனை செய்து முடிவுகளை எடுக்கும். இந்த ஆண்டிற்கான முக்கிய கடனுக்கான வட்டியை (ரெப்போ ரேட்) 1.35 சதவீதம் ரிசர்வ் வங்கி குறைந்திருக்கிறது. மந்தகதியில் இருக்கும் பொருளாதாரத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வட்டி குறைப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி உறுதிசெய்திருக்கிறது. 

rbi, seithipunal

இந்த நிலையில் சென்ற செப்டம்பர் காலாண்டில் இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதமாக சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த முறையும் வட்டி குறைப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் என்று பெரும்பாலான நிபுணர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கடந்த 3ம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டம் தொடங்கியது. 

rbi governor, seithipunal

இதை தொடர்ந்து, இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் நிதிக்கொள்கை ஆய்வறிக்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து வெளியிட இருக்கிறார். ரிசர்வ் வங்கி பெரும்பாலும் கடனுக்கான வட்டியை (ரெப்போ ரேட்) குறைக்க வாய்ப்பு இருக்கிறது, எனவே வங்கிகளில் கடன் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள்,  ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸின் அறிவிப்பை கேட்ட பிறகு முடிவு எடுங்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reserve bank of india interest for loan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->