ஜியோவிற்கு கட்டணம் ஏன் தெரியுமா?! வாடிக்கையாளர்கள் செய்த சதி! வெளியான அதிர்ச்சியான தகவல்கள்!  - Seithipunal
Seithipunal


ஜியோ எண்ணிலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 6 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. அதே சமயம் வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு இணையாக, கூடுதல் இணைய டேட்டா வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளது. 

ஜியோ சிம் செயல்பாட்டுக்கு வரும் வரை, ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன், பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட  தொலை தொடர்பு சேவைகளை வழங்கிய நிறுவனங்கள் அவுட்கோயிங் கால்களுக்கு கட்டணம் வசூலித்தது. இந்த நிலையில், அனைத்து அவுட்கோயிங் கால்களும் இலவசம் என்ற அறிவிப்போடு ஜியோ களமிறங்கியது. அதேபோல இண்டெர்நெட் டேட்டாவுக்கும் சலுகைகளை வாரி வழங்கியது. 

இந்த நிலையில்,  ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அனைத்து ஜியோ வாடிக்கையாளரும், மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்கும் போது நிமிடத்திற்கு 6 பைசா வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும், லேண்ட்லைனில் அழைக்கவோ, ஜியோ சிம்முக்கு அழைக்கவோ கட்டணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் என்ன என்பதனையும் ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. பொதுவாக அவுட்கோயிங் அழைப்புகளுக்கு தொலைதொடர்பு நிறுவனங்கள், IUC என்னும் இணைப்புக் கட்டணத்தை, தொலைத்தொடர்பு நிறுவனமான டிராய்க்கு செலுத்தவேண்டும். ஆனால் ஜியோ நிறுவனத்தை பொருத்தவரை, அந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வசூலிக்காமல், ஜியோவே டிராய்க்கு செலுத்துகிறது.

பிற நிறுவனங்களில் அவுட்கோயிங் கால்கள் கட்டணம் அதிகம் என்பதால் பெரும்பாலான பிற நெட்ஒர்க் 2G வாடிக்கையாளர்கள், ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மிஸ்டு கால் கொடுக்க ஆரம்பித்துள்ளனர் இப்படியாக வந்த மிஸ்டுகால் மட்டும் நாள்தோறும் 25 கோடி முதல் 30 கோடி வரை வருவதாக ஜியோ தெரிவித்துள்ளது. இந்த மிஸ்டு கால்களானது, ஜியோ நிறுவனத்திற்கு 65 கோடி முதல் 75 கோடி நிமிட இன்கமிங் அழைப்புகளாக ஆக இருந்திருக்க வேண்டியவை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த அவுட்கோயிங் அழைப்புகளுக்காண IUC இணைப்பு கட்டணமாக மட்டும், கடந்த 3 ஆண்டுகளில் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாயை ட்ராய்க்கு ஜியோ நிறுவனம் காட்டியுள்ளது. இதன்காரணமாகவே இனி வேறு தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான அவுட்கோயிங் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்க ஜியோ முடிவுசெய்துள்ளது. அதே வேளையில், ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இடையே எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அவுட்கோயிங் அழைப்புகளுக்கு இணைப்பு கட்டணத்தினை வரும் 2020 ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வசூலிக்கவில்லை என ட்ராய் அறிவித்துள்ள நிலையில், அதுவரை இதர நெட்ஒர்க் அவுட்கோயிங் கால்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதேசமயம், அவுட்கோயிங் அழைப்புகளுக்கு கட்டணமான 6 பைசாவிற்கு இணையாக இண்டர்நெட் டேட்டா வாடிக்கையாளர்களுக்கு தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reason Behind jio outgoing call rates


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->