பெட்ரோல், டீசல் அதிரடி விலை குறைப்பு!!
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 26 பைசா குறைந்து ரூ.84.96 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை குறைந்துள்ளது. நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது.
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 26 பைசா குறைந்து ரூ.84.96 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல, டீசல் விலை 18 பைசா குறைந்து ரூ.79.51க்கு விற்பனையாகிறது.
இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இது சென்னை நகருக்கான பெட்ரோல், டீசல் விலை ஆகும். பிற மாவட்டங்களில் சிறு மாற்றம் இருக்கலாம்.