மீண்டும் குறைந்த பெட்ரோல், டீசல் விலை!  - Seithipunal
Seithipunal


பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 

நாடு முழுவதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே மாதம் வரை பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் மாதம் முதலாக, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

சென்னையில் பெட்ரோல் விலை கடந்த 10 ஆம் தேதி, 8 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.85.96க்கும், ஒரு லிட்டர் டீசல் 10 காசுகள் குறைந்துரூ.78.38க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 பைசா குறைக்கப்பட்டு ரூ.84.85-ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் டீசல் விலையும் லிட்டருக்கு 12 பைசா குறைந்து ரூ.78.26-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petrol price sep 13


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->