மாற்றம் கண்டிடாத பெட்ரோல் டீசல் விலை.! இன்றைய விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 5-வது நாளாக உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். 

கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.இந்த விலையேற்றம்  இந்தியாவிலும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தொடர்ந்து 5-வது நாளாக பெட்ரோல், டீசல் இரண்டும் விலை உயர்வை சந்தித்து வருகின்றன.

சென்னையில் நேற்று 77ரூபாய் 72 காசுகளுக்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல், நேற்றைய விலையிலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் இன்றும் 77 ரூபாய் 72 காசுகளுக்கு விற்பனையானது. இதே போல நேற்று 71 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல், நேற்றைய விலையிலிருந்து எந்த மாற்றமும் இல்லாமல் இன்றும் 71 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனையாகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாகவும், ஆனால் வினியோகம் பாதிக்கப்படாது என்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petrol diesel price on jan 22


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->