போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம்.. புதிய ஆஃபர்.. அலைமோதிய பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த ஆண்டு வெங்காய விளைச்சல் குறைந்தால் வெங்காயத்தின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. 

விளைச்சலில் முன்னணியில் இருக்கும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பெய்த கன மழையால் மிகவும் பாதிக்கப்பட்டது. தற்போது இதன் எதிரொலியாக வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

தற்போது இந்தியாவில் தங்கம், பணம் திருட்டை தொடர்ந்து வெங்காய திருட்டு அதிகரித்துள்ளது. உத்திரபிரதேசத்தில் வாரணாசி நகரம் ஒரு கிலோ வெங்காயம் 130 முதல் 140 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் லகுராபிர் என்ற பகுதியில் உள்ள செல்போன் கடையில் ஒரு ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஸ்மார்ட்போன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசம் என அறிவித்துள்ளனர். இதனை அறிந்த பொதுமக்கள் செல்போன் கடைமுன் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் அலை மோதியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one smartphone free onion


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->