தமிழகத்தில் ஒரு கிலோ வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்பனை.! அலைமோதும் மக்கள் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


சில காலங்களாகவே வெங்காய விலையானது உற்பத்தி தட்டுப்பாடு காரணமாக அதிகரித்து வந்தது. இந்நிலையில், வெங்காய தட்டுப்பாட்டினால் கிலோ 200 ரூபாய்க்கு விற்கும் அளவிற்கு நிலைமை மோசமானது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டியது.

இந்தநிலையில், கடலூர் துறைமுகம் பகுதியில் உள்ள காய்கறி கடை ஒன்றில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ 10 ரூபாய்க்கு விற்பதால் வெங்காயத்தை வாங்க மக்கள் அதிகம் குவிந்து வருகின்றனர்.

இதற்கிடையே, எகிப்திலிருந்து வெங்காயங்களை இறக்குமதி செய்தது . திருச்சியில் சந்தையில் விற்கப்படும் எகிப்து வெங்காயங்கள் தேங்கி நிற்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இதற்கு காரணமாக வெங்காயம் அதிக எடையுடனும், ருசியற்று, காரத்தன்மை இன்றி இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதனை வாங்க பொது மக்கள் விரும்பவில்லை என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிலோ 90 ரூபாய்க்கு குறைத்து விற்பனை செய்தும், அதனை மக்கள் வாங்க மறுப்பதாகவும், இதுபோலவே தஞ்சை காமராஜ் காய்கறி சந்தையிலும் எகிப்து வெங்காயம் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

one kg onion for ten rupee


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->