கொரோனா நோயாளிகளை கையாள்வதில் ஏற்பட்ட குளறுபடி.. தனது பதவியை ராஜினாமா செய்த பிரதமர்.!! - Seithipunal
Seithipunal


மங்கோலியாவில் கொரோனா நேயாளிகளை கையாள்வதில் ஏற்பட்ட குளறுபடியால் போராட்டம் வெடித்த நிலையில், அந்நாட்டு பிரதமர், துணை பிரதமர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்துள்ளனர். 

அந்நாட்டில் ஒரு மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணிற்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். நடுங்கும் குளிரில் மருத்துவமனை உடை மட்டும் அணிந்து இருந்த அப்பெண், பச்சிளம் குழந்தையுடன் தனிமை முகாமுக்கு அனுப்பும் காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியானது.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தலைநகர் உலான் படோரில் நேற்றுமுன்தினம் போராட்டங்கள் வெடித்தது. உடனே துணை பிரதமர், சுகாதாரத்துறை அமைச்சர் ராஜினாமா செய்தனர். இதையடுத்து மங்கோலியா நாட்டின் பிரதமர் உக்னா குரேல்சுக் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mongolian pm resigns


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->