பால் விலை உயர்வு!! தமிழக அரசு அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் மீதான மானிய கோரிக்கை விவாதத்தின் நடைபெற்ற சட்டசபை கூட்ட விவாதத்தில் பால் உற்பத்தியாளர்கள் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கேள்விக்கு பதிலளித்த, பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பால் உற்பத்தியாளர்களுக்கு விலையை உயர்த்தி தர அரசு தயார் எனவும் அதேபோல் பால் நுகர்வோர்களுக்கான விலையையும் உயர்த்தினால் தான் சரியாக இருக்கும் என தெரிவித்தார். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே பால் விலைகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், பால் விலை உயரும் என முதல்வரின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொது மக்களை பாதிக்காத வகையில் பால் விலை உயர்த்தப்படும் என தெரிவித்தார். மேலும் நுகர்வோரின் நீண்ட நாள் கோரிக்கைக்காகவே பால் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதாக அமைச்சர் கடந்த மாதமே தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 28 ரூபாயிலிருந்து, 32 ரூபாயாகவும், அதாவது லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றிற்கு 35 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, அதாவது லிட்டர் ஒன்றிற்கு ௬ ரூபாய் உயர்த்தப்படுகிறது.

அதேபோல், அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய்  உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது நாளை அமலுக்கு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

milk price increase


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->