அமேசான், பிளிப்கார்ட்டுக்கு வரப்போகும் அதிரடி தடை! தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி!! - Seithipunal
Seithipunal


டெல்லியில் ஆதித்திய துபே என்கிற 16 வயது மாணவர் வழக்கறிஞர் மூலம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்தியாவில் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘அமேசான்’, ‘பிளிப்கார்ட்’ போன்ற இணையதள வணிக நிறுவனங்கள் தங்கள் வினியோக பொருட்களை பாதுகாக்க பிளாஸ்டிக் உறைகளை பயன்படுத்துகின்றன. அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது ஒரு மாதத்துக்குள் இது குறித்து பதில் அளிக்கும்படி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, தேசிய பசுமை தீர்ப்பாய தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து மாணவரின் வழக்கறிஞர் கூறியவை, பிளாஸ்டிக் திடக்கழிவு மேலாண்மை வாரியம் வழங்கிய விதிகள் அனைத்தும் இணையதள வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதை கண்காணிக்க தவறியதே இந்த குற்றங்களுக்கு காரணம் என்று கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may be plastic ban in amazon and flipkart


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->