முதல்நாளே அதிகரித்த சிலிண்டர் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது குறைந்துள்ளது. இந்தியாவில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை மாதமொருமுறை நிர்ணயிக்கப்படும்.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 2-வது நாளாக மாற்றமின்றி விற்பனை..!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணி க்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றனர். கடந்த வருடம் டிசம்பர் மாதம் 15ம் தேதி சிலிண்டர் விலை ரூ.710 ஆக இருந்தது. 

இந்நிலையில் பிப்ரவரி 4-ஆம் தேதி ரூ. 25 அதிகரித்து ரூ. 735 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதையடுத்து பிப்ரவரி 15 ஆம் தேதி ரூ. 50 அதிகரித்து ரூ. 785 க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 25ம் தேதி ரூ.25 அதிகரித்து ரூ. 810 ஆக விற்பனையானது. பிப்ரவரி மாதத்தில் சிலிண்டர் விலை மூன்று முறை அதிகரித்த நிலையில், இன்று மார்ச் 1ஆம் தேதி மேலும் 25 ரூபாய் அதிகரித்துள்ளது. தற்போது வீட்டிற்கு வினியோகிக்கப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ. 835 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mar 01 gas price in tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->