நீண்ட நாட்கள் பிறகு ஊரடங்கில் முக்கிய தளர்வுகள்.. வெளியான அறிவிப்பு.!!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஜனவரி 6ஆம் தேதி முதல் கடுமையான கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் தவிர மற்றவை அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டது. மக்கள் அத்தியாவசிய தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே கொரோனா தடுப்பூசி செல்லும் பணியும் தீவிரமாக நடைபெற்றது. 3.2 கோடி பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 70 லட்சம் பேருக்கு இரண்டு டோஸ் 
 தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. 

இதையடுத்து, நேற்று முதல் ஊரடங்கில் தளர்வுகளை அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக செயல்பட தொடங்கியுள்ளது. இரவுநேர விடுதிகள், மதுபான விடுதிகள், சலூன் கடைகள், உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அனைத்து இடங்களிலும் அரசு அளித்துள்ள கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lockdown relaxations for england


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->