தங்கத்திற்கு போட்டியாக வந்த மல்லிகை பூ... ஒரு கிலோ ரூ.4,000.,க்கு விற்பனை..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நிலவும் குளிரின் காரணமாக பூக்களின் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக மல்லிகை பூவின் விளைச்சல் வெகுவாக குறைந்ததால் சந்தைகளுக்கான மல்லிகை பூ வரத்து கணிசமாக குறைந்துள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் தற்பொழுது பொங்கல் சீசன் தொடங்கியுள்ளதால் பூக்களின் தேவையும் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மல்லிகை பூவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று தமிழகத்தில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2,500க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் ரூ.1,500 உயர்ந்து ஒரு கிலோ ரூ.4,000 விற்பனை செய்யப்படுகிறது. சாதாரண நாட்களில் ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 10 நாட்களில் படிப்படியாக உயர்ந்து இன்று ரூ.4,000க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,000.,த்தை கடந்த நிலையில் தற்போது அதற்கு போட்டியாக மல்லிகை பூவின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் பெண்கள் மல்லிகைப்பூ வாங்க முடியாத சூழல் உண்டாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jasmine sold Rs4000 per kg in TamilNadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->