#BREAKING :: மல்லிகை பூ விலையை கேட்டு மனம் வாடும் பெண்கள்...!! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..?? - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் நிலவும் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிரின் காரணமாக பூக்களின் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக மல்லிகை பூவின் விளைச்சல் வெகுவாக குறைந்துள்ளதால் சந்தைகளுக்கான வரத்து கணிசமாக குறைந்துள்ளது. அதேபோன்று பொங்கல் பண்டிகை சீசன் தொடங்கியுள்ளதால் பூக்களின் தேவையும் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பூக்களின் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.

இந்த நிலையில் நிலக்கோட்டை சந்தைக்கு சில நாட்களாக பூக்களின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு தினமும் 100 டன் பூக்கள் வரவேண்டிய நிலையில் தற்பொழுது 20 டன் கூட வரவில்லை. இந்நிலையில் பொங்கல் பண்டிகை சீசன் ஆரம்பமானதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ கிலோ ரூ. 3,500, முல்லை ரூ. 2,000, ஜாதி மல்லி ரூ.1700, கனகாம்பரம் ரூ.1200, சம்பங்கி ரூ.200, செண்டு மல்லி ரூ.100, செவ்வந்தி ரூ.200, பன்னீர் ரோஜா ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.270 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மல்லிக்கு மாற்றாக வாசனை இல்லாத மல்லியான காக்கரட்டான் மல்லி கிலோ ரூ. 2,000.,க்கு விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகைப் பூவின் விலை உயர்வால் பெண்கள் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jasmine flower price increased in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->