ஐந்து வருடத்தில் இல்லாத வீழ்ச்சியை கண்ட இந்தியா..! எச்சரிக்கை விடும் நாணய நிதியம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பொருளாதார சரிவு மற்றும் தேக்க நிலை பிரச்சனையானது இருந்து வருகிறது. இந்த பிரச்சனை இணையதளம் முதல் தொலைக்காட்சிகள் வரை என அனைத்தும் பெரும் விமர்சனத்திற்கும்., விவாதத்திற்கும் உள்ளாகியது. 

இந்த நிலையில்., இந்த விஷயம் தொடர்பாக மத்திய அரசின் சார்பில் எந்த விதமான விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்த நிலையில்., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியளர்களுக்கு பேட்டியளித்தார். 

economics., economy,

அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியில் கூறிய விளக்கங்கள் போதுமானதாக இல்லை என்ற கருத்துக்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த நிலையில்., இந்திய பொருளாதரம் குறித்த தகவலை சர்வதேச நாணய நிதியம் அமைப்பு அறிக்கையாக வெளியிட்டுள்ளது. 

வெளியான அறிக்கையின் படி., இந்த 2019 ஆம் வருடம் மற்றும் 2020 ஆம் வருடத்தில் இந்திய பொருளாதார வளர்ச்சியானது வலிமையற்ற முறையில் இருக்கும் என்றும்., எதிர்பார்த்த அளவை விட கடுமையான அளவில் பொருளாதார வீழ்ச்சியினை இந்தியா சந்தித்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்., கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவின் ஜிடிபி மதிப்பானது 5 விழுக்காடு அளவில் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian economics have getting down report by IMF


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->