வருமான வரி செலுத்துபவர்களா?! இதோ உங்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!  - Seithipunal
Seithipunal


நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவி வருவதால், பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு முயற்சியாக வருமான வரி முறையில் மாற்றம் வரும் போன்ற, மேலும் சில நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஜி.டி.பி. எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆனது நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட சரிவாகும். பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், கார்ப்பரேட் வரி அண்மையில் குறைக்கப்பட்டது. அப்போதே வருமான வரி விகிதங்களும் மாற்றி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சில விஷயஙங்களை சூசகமாக தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,  பொருளாதாரத்தை சீரமைக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட ஒவ்வொரு துறைக்கும் நிதி திட்டங்களை அறிவித்துள்ளோம். இதன் மூலம் அனைத்து நிலையில் உள்ளவர்களுக்கும் பணம் சென்றடையும். அப்போது நுகர்வு அதிகரிக்கும் போது, பொருளாதாரம் மேம்படும் என தெரிவித்துள்ளார். 

"வருமான வரி விகிதங்களிலும் மாற்றம் செய்யப்படுமா என்று கேள்வி தற்போது எழுந்துள்ளது. ஆமாம் என்று நான் கூறினால், அது  எப்போது என்ற கேள்வி எழும். பிறகு பட்ஜெட் தான் மிக விரைவில் வருகிறதே, இப்போது எதற்கு அறிவிக்க வேண்டும் என்றும் கேள்வி எழுப்புவர். ஆமாம் என்று சொல்ல நினைத்தாலும் அதை நான் இப்போது சொல்ல மாட்டேன். அது குறித்து ஆய்வு செய்து வருகிறோம், வருமான வரி முறைகளை சீரமைப்பது உள்ளிட்டவை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது, மேலும் வரி செலுத்துவோர் துன்புறுத்தப்படமாட்டார்கள். வரி முறைகளை எளிமையாக்குவதுடன் விலக்குகளும் நீக்கப்பட வேண்டும். வருமான வரி உள்ளிட்ட நேரடி வரி முறையில், கணக்குகளை சரி பார்ப்பது யார் என்பது தெரியாது. அதுபோல மறைமுக வரி முறையிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்" என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

income tax scheme may be change expecting announcement from central govt


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->